ஓட்டுனரை தாக்கி லொறியை திருடிய அகதிகள்

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரித்தானியா செல்வதற்காக லொறி ஓட்டுனரை தாக்கி விட்டு லொறியை திருடி சென்ற அகதிகளை பொலிசார் கையும் களவுமாக பிடித்துள்ளார்கள்.

பிரான்ஸில் உள்ள Calais நகரில் வசிக்கும் அகதிகள் கும்பல் பிரித்தானியாவுக்கு செல்ல முடிவு செய்தார்கள்.

அதன்படி அங்கிருந்த லொறி ஓட்டுனரை அவர்கள் அணுகியுள்ளனர். பின்னர் அகதிகள் கும்பல் தங்கள் கையில் வைத்திருந்த செங்கலை வைத்து லொறி ஓட்டுனர் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்கள்.

இதையடுத்து படுகாயமடைந்த ஓட்டுனரின் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. பிறகு சாலையில் நினைவிழந்த நிலையில் அவர் விழுந்தார்.

பின்னர், அகதிகள் அவரின் லொறியை திருடி கொண்டு சென்றுள்ளனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த பொலிசார் லொறி ஓட்டுனரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருடிய லொறியுடன் தப்பித்து சென்ற அகதிகள் கும்பலை பொலிசார் மடக்கி பிடித்துள்ளார்கள்.

பிரித்தானியா லொறி ஓட்டுனர்களுக்கு சம்பவம் குறித்த தகவலை தேசிய வாகன குற்றம் புலனாய்வு சேவை நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், லொறி ஓட்டுனர்கள் அனைவரும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்