நேர மாற்றம்: பிரான்ஸ் மக்களை எச்சரிக்கை பொலிசார்

Report Print Kabilan in பிரான்ஸ்

ஐரோப்பாவில் இலையுதிர் காலத்தில் ஒரு மணிநேரம் பின்னோக்கி மாற்றப்பட்டுள்ளதால் பிரான்ஸ் நாட்டு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக வீட்டு உரிமையாளர்களும், இரவில் மிதிவண்டி பயணம் மேற்க்கொள்பவர்களும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏனெனில் நேரம் ஒரு மணிநேரம் முன்னதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் இரவின் நீளம் நீண்டு இருக்கும். இது திருடர்கள், குற்றவாளிகளுக்கு மிகவும் சாதமாக இருக்கக்கூடும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

எனவே வெளியூர்களுக்கு செல்பவர்கள் தங்களது வீடுகளை மிகவும் பத்திரமாக பூட்டி வீட்டு செல்ல வேண்டும்.

இரவில் மிதிவண்டிகளில் பயணம் மேற்கொள்பவர்கள் ஒளிரும் வகையிலான பட்டைகளை கை, கால்களில் அணிந்து கொள்ள வேண்டும் என பொலிசார் எச்சரித்ததுடன் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலான நேரங்களில் தான் அதிக அளவு விபத்துக்கள் உண்டாவதால் பாதசாரிகளும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்