300,000 வெளிநாட்டவர்கள் பிரான்ஸில் முறையற்ற நிலையில் உள்ளனர்: அமைச்சர் தகவல்

Report Print Raju Raju in பிரான்ஸ்
204Shares
204Shares
lankasrimarket.com

பிரான்ஸில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களில் சுமார் 300,000 பேர் முறையற்ற நிலையில் உள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கிரார்ட் கொலம்ப் கூறியுள்ளார்.

வலதுசாரி பிரதிநிதிகளுடன் சட்டமன்றத்தில் நடந்த 2018-க்கான குடியேற்ற வரவு செலவு திட்ட விவாதத்தின் போதே கொலம்ப் இதை தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் குடியேற்ற கொள்கை குறித்த முக்கிய தகவல்களையும் கொலம்ப் அப்போது கூறினார்.

அவர் கூறுகையில், குடியேற்றத்தின் புள்ளிவிவரங்களில் எந்த மர்மமும் இல்லை. தஞ்சம் கோருவோரை நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட கொள்கையை தொடர முயற்சிப்பதாக கூறியுள்ளார்.

கடந்த மாதத்தில் மட்டும் முறையற்ற முறையில் குடியேறியவர்களை நீக்கும் சதவீதம் 6.5 ஆக உயர்ந்துள்ளது.

பெரியளவிலான குடியேற்றங்கள் ஒழுங்குப்படுத்தபடுமா என் கேட்கிறீர்கள், பிற நாடுகளின் உடன்படிக்கைகளுடன் இம்முறை அமுலுக்கு வரலாம்.

இது தொடர்பாக பேச நைஜர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு டிசம்பரில் பயணம் மேற்கொள்ள போவதாக கொலம்ப் கூறியுள்ளார்.

புதிய குடியேற்ற மசோதாவானது குடியேற்றம் மற்றும் புகலிடத்துக்கு 26 சதவீத பணத்தை, அதாவது 1.38 பில்லியன் யூரோக்களாக உயர்த்தும்படி அமைக்கப்பட்டுள்ளது.

அகதிகள் மற்றும் குடியேறுபவர்களின் ஒருங்கிணைப்பு சிறப்பாக அமையவே இது செய்யப்படுகிறது.

வீடு, சமூகம் மற்றும் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு, பிரஞ்ச் மொழியை அகதிகள் கற்று கொள்ளுதல் போன்றவை அவர்களை நாட்டுடன் ஒருங்கிணைக்க உதவும் என கொலம்ப் கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்