பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள்: அரசு எடுத்த முடிவு

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக வரும் அகதிகள் மற்றும் குடியேறுபவர்களை தடுக்க பிரான்ஸுக்கு பிரித்தானியா அரசு இன்னும் அதிகளவில் நிதி ஒதுக்கவுள்ளது.

பிரான்ஸில் காலேஸ் மற்றும் டன்கிர்க் நகருக்கு வாரத்துக்கு நூற்றுக்கணக்கான அகதிகள் வருகிறார்கள்.

இதில் பலர் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு செல்கிறார்கள். இந்த பகுதிகளிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய சுலபம் என்பதால் இப்படி செய்கிறார்கள்.

மனித கடத்தலில் ஈடுபடுபவர்கள் அகதிகளை வலுக்கட்டாயமாக பிரித்தானியாவுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கிறார்கள்.

இதை தடுத்து பாதுகாப்பை அதிகரிக்க பிரித்தானியா கடந்த 2015-லிருந்து £124 மில்லியன் பணத்தை பிரான்ஸுக்கு வழங்கியுள்ளது.

ஆனாலும் இந்த எண்ணிக்கை குறையவில்லை, இது சம்மந்தமாக கடந்த வருடம் 303 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த வருடம் இதுவரை மட்டும் 281 கைதாகியுள்ளனர், இதையடுத்து பாதுகாப்பை அதிகரிக்க பிரான்ஸுக்கு இன்னும் அதிக பணம் ஒதுக்க பிரித்தானியா முடிவெடுத்துள்ளது.

இது சம்மந்தமாக பிரித்தானிய உள்துறை செயலர் ஆம்பர் ருட் லண்டன் அதிகாரிகளிடம் கடந்த வாரம் பேசியுள்ளார்.

மனித கடத்தில் ஈடுபடுபவர்களை தடுக்கவும், சட்டவிரோதமாக அகதிகள் பிரித்தானியாவுக்குள் நுழைவதை கட்டுப்படுத்தவும் கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து பிரான்ஸ் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாக உள்துறை அலுவலகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்