Eleanor சூறாவளிக்கு பிரான்ஸில் 3 பேர் பலி: பலர் காயம்

Report Print Raju Raju in பிரான்ஸ்
97Shares
97Shares
ibctamil.com

பிரான்ஸில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட Eleanor சூறாவளிக்கு மூன்று பேர் பலியாகியுள்ளதாக நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் ருத்ரதாண்டவம் ஆடிய Eleanor சூறாவளியின் பாதிப்பு தற்போது பிரான்ஸிலும் இருந்து வருகிறது.

இதன் காரணமாக மூவர் பலியானதுடன் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். 26 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் நால்வர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

கடும் சூறாவளி புயலால் ஏற்படும் வெள்ளம் மற்றும் பனிச்சரிவு காரணமாக நாட்டின் 25 பகுதிகளுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இது வெள்ளிக்கிழமை 17 பகுதிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் தென்மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பிரெஞ்சு மலை பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்