பிரான்ஸில் மகனை காப்பாற்ற முயன்ற தாய்க்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in பிரான்ஸ்
315Shares
315Shares
lankasrimarket.com

பிரான்ஸில் ஆற்றில் விழுந்த மகனை காப்பாற்றும் முயற்சியில் தாய் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் Valloire-ல் தான் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நண்பகல் நடந்துள்ளது.

அங்குள்ள ஆற்றங்கரையில் குறித்த 11 வயது மகனும், அவன் தாயும் நின்றிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக மகன் ஆற்றில் விழுந்துள்ளான்.

இதையடுத்து மகனை காப்பாற்ற ஆற்றில் குதித்த தாய் அவனை காப்பாற்றியுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த தாய் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

அவரின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்