இறந்த மகளின் உடலை பெற கனடா சென்ற தாய் மர்ம மரணம்

Report Print Harishan in பிரான்ஸ்

கனடாவில் இறந்த தன் மகளின் பிரேதத்தை பெற சென்றிருந்த பிரான்ஸ் பெண்மணி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸின் Bethune பகுதியில் இருந்து கனடாவிற்கு தன் கணவருடன் சுற்றுலா சென்றிருந்த மரியொன் ரிகட்(25) என்ற மருத்துவ மாணவி, கடந்த வாரம் அங்கு ஏற்பட்ட விபத்து ஒன்றில் பலியாகியனார்.

மகள் இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த அவரது தாய் ஃபெபியன் சோமன்(53), மகளின் உடலை பெற கனடாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு நேற்று மதியம் திடீரென தாய் ஃபெபியனும் மாயமாகியுள்ளார். இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர், பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் பொலிசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், குறித்த பெண் மாயமான இடத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ஆற்றின் கரையில் சடலமாக மிதப்பதை கண்டுபிடுத்துள்ளனர்.

மேலும், உயிரிழந்துள்ள ஃபெபியனின் உடலை மீட்டுள்ள பொலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

இறந்த மகளின் உடலை பெற கனடாவிற்கு சென்றிருந்த தாயும் பலியாகியுள்ள சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்