அமெரிக்கா மீது கடும் கோபத்தில் பிரான்ஸ்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
302Shares
302Shares
lankasrimarket.com

அமெரிக்கா ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அது ஈரான்மீது மீண்டும் தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளது.

இந்த முடிவு ஏற்றுக்கொள்ள தக்கதல்ல என பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரான Jean-Yves Le Drian, அமெரிக்காவின் முடிவினால் ஐரோப்பிய நிறுவனங்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய நிறுவனங்கள் ஈரானுடனான வியாபார ஒப்பந்தங்களை ஆறு மாதங்களுக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் புதிய வியாபார ஒப்பந்தங்கள் செய்யக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் அவர்கள் மீதும் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

டிரம்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான Airbus,100 விமானங்களை ஈரானுக்கு விற்பதாக செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் தொடருமா என்று ஈரான் கேட்டுள்ளது.

டிரம்பின் முடிவை கண்டித்துள்ள அதே நேரத்தில், ஐரோப்பிய நிறுவனங்கள் ஈரானுடன் வர்த்தகம் செய்வதற்காக புதிய விதிகளை உருவாக்குமாறு ஐரோஈப்பிய ஒன்றியம் அமெரிக்காவைக் கேட்டுக்கொள்ள இருப்பதாக பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Airbus மட்டுமின்றி பிரான்ஸ் நாட்டின் எண்ணெய் நிறுவன ஜாம்பவானான Total மற்றும் கார் தயாரிப்பாளர்களான Renault மற்றும் Peugeot உடனும் பல பில்லியன் டொலர்களுக்கான ஒப்பந்தத்தில் ஈரானுடன் பிரான்ஸ் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்