பிரித்தானிய மாணவியை கொன்று புதைத்தது எப்படி: கொலைகாரனின் மனைவி வெளியிட்ட தகவல்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
375Shares
375Shares
ibctamil.com

பிரான்சில் தொடர் கொலைகளுக்கு காரணமான கொலைகாரனின் முன்னாள் மனைவி பிரித்தானிய மாணவியை கொலை செய்து உடலை புதைத்தது தொடர்பில் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போது 70 வயதாகும் Monique Oliver தமது முன்னாள் கணவரான Michel Fourniret தான் அப்போது 20 வயதான பிரித்தானிய மாணவி Joanna Parrish என்பவரை பலாத்காரம் செய்து கொன்றுள்ளார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ரகசிய விசாரணையின்போது அவர் இந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.

தமது முன்னாள் கணவர் மாணவி Joanna Parrish-ஐ வாகனம் ஒன்றில் கடத்திச் செல்லும் போது தாம் பார்த்ததாகவும், ஆனால் அந்த கொடூர சம்பவத்தை காணும் துணிவு இல்லை என்பதால் கணவருடன் தாம் செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு Michel Fourniret தாம் பிரித்தானிய மாணவியை கொலை செய்துள்ளதாக முதன் முறையாக ஒப்புக்கொண்ட பின்னர் அவரை விவாகரத்து செய்துள்ளதாக கூறும் Monique Oliver,

பலமுறை தமது கணவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தும் வந்துள்ளார்.

நீண்ட 28 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பின்னர் தமது மகளின் மரணத்திற்கு நீதி கிடைத்துள்ளதாக Joanna-ன் பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் மொத்தம் 7 இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக Michel Fourniret கடந்த 2008 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்