அம்பானி வீட்டுக்கு விஷேசத்துக்கு பிரான்சிலிருந்து உணவுகள்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
575Shares
575Shares
lankasrimarket.com

முகேஷ் அம்பானியின் மூத்த மனான ஆகாஷ் அம்பானிக்கும், ஸ்லோகா மேத்தாவுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு மும்பையின் ஆண்டலியாவில் உள்ள 27 மாடி சொகுசு இல்லத்தில் நடைபெறுகிறது.

இதற்கான பிரத்யேக ஏற்பாடுகள் ஜோராக நடந்துவரும் நிலையில், உணவுகள் பிரான்சிலிருந்து வரவழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்சில் நம்பர் ஒன் உயர்தர பேக்கரி நிறுவனமான லாட்ரீ பேக்கரியில் இருந்து வரவழைக்கப்படவுள்ளதாம்.

நிச்சயதார்த்த உணவுகளை மும்பையை சேர்ந்த புட்லிங் பேங்கட்ஸ் அண்ட் கேட்டரிங் நிறுவனம் ஏறபாடு செய்கிறது.

இந்நிறுவனமே பிரான்சில் இருந்து உணவுகள், இனிப்பு வகைகளை வரவழைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்