பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து! 13 பேர் படுகாயம்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிசின் 19ஆம் வட்டாரத்தில் உள்ள rue Alphonse-Karr வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

உயிரிழப்புகளை தவிர்க்க சுமார் நூறு தீயணைப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்களின் முயற்சியால் தீ கட்டுக்குள் வந்தது.

இதற்காக 25 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகினர். அவர்களில் இரண்டு சிறுமிகள் மற்றும் காவல்துறை அதிகாரியும் அடங்குவர்.

மேலும் பலர் மூச்சுத்திணறலுக்கு உள்ளான நிலையில், 19ஆம் வட்டார காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்