பிரான்ஸ் சிறைச்சாலையில் மோசமாக மோதிக் கொண்ட சிறைக் கைதிகள்! தடுக்க போராடிய அதிகாரிகள்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் சிறைச்சாலையில் கைதிகள் ஒருவரை ஒருவர் மோசமாக தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Perpignan நகரத்தில் இருக்கும் சிறைச்சாலை ஒன்றில் 6 கைதிகள் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் கடந்த செவ்வாய் கிழமை திடீரென்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அங்கிருந்த முள்ளுக்கரண்டி மற்றும் கண்ணாடி குவளைகள் கொண்டு மிகவும் மோசமாக தாக்கிக் கொண்டனர். நீண்ட நேரம் இந்த சண்டை நடந்ததால், இந்த தகவல் உடனடியாக சிறைச்சாலை அதிகாரிக்கு தெரிந்துள்ளது.

அதன் பின் விரைந்து வந்த சிறைச்சாலை அதிகாரிகள் பலர் ஒன்று சேர்ந்து நீண்டே நேரமாக நடந்த இந்த மோதலை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தனர்.

இதில் அதிகாரிகள் எவரும் காயமடையவில்லை எனவும் கைதிகளில் சிலர் லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers