பாரிஸ் தேவாலய தீவிபத்து முன்கூட்டியே கணிக்கப்பட்டதா? வானில் நட்சத்திரம்.... லண்டன் தீ விபத்தோடு ஒப்பிட்ட ஜோதிடர்

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்

பிரான்சின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள நோட்ரே டேம் டி தேவாலயம் தீவிபத்தில் சிக்கி சேதமடைந்தததையடுத்து இந்த விபத்து ஏற்படுவதற்கு முந்தைய நாள் இரவு வானத்தில் மின்னிய நட்சத்திரங்கள் இந்த விபத்தின் மர்மத்தை விளக்குவதாக நம்புகிறோம் என ஜோதிடர் SJ Anderson தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, நோட்ரே டேம் டி தேவாலய தீவிபத்தை 1666 ஆம் ஆண்டு லண்டனில் ஏற்பட்ட தீவிபத்து சம்பவத்தோடு ஒப்பிட்டு டுவிட் செய்துள்ளார்.

1666-ல் செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை லண்டனில் ஏற்பட்ட தீவிபத்து வரலாற்றில் தீவிபத்தின் கோரத்தை உலகிற்கு உணர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீவிபத்தில் 70,000 முதல் 80,000 மக்கள் வீடுகளை இழந்தனர்.

லண்டனில் தீவிபத்து ஏற்படும் போது, சூரியனிலிருந்து ஆறாவது கிரகமான சனி 20 டிகிரி பிற்போக்கான நிலையில் இருந்தது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமான தற்போதும் சனி அதே டிகிரி அளவில் தான் இருக்கிறது. இந்த நேரத்தில் தான் தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அதனை லண்டன் தீவிபத்தோடு ஒப்பிட்டுள்ளார் ஜோதிடர்.

இருப்பினும், லண்டனில் ஏற்பட்ட அழிவு போன்று பாரிஸில் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், 500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நூலில் நோட்ரே டேம் டி தேவாலய தீவிபத்து குறித்து முன்கூட்டியே நாஸ்டர்டாமஸ் என்ற தீர்க்கதரிசியால் கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாரிஸில் பிறந்த நாஸ்டர்டாமஸ் , எதிர்காலத்தை மிகவும் துல்லியமாக கணிக்கக்கூடிய தீர்க்கதரிசி என உலக மக்களால் அறியப்படுகிறார்.

இவர் லண்டன் தீவிபத்தை முன்கூட்டியே கணித்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers