Brexit குறித்த கவலையில் இருக்கும் பிரித்தானியர்களுக்காக தூதரகம் எடுக்கும் நடவடிக்கை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

Brexit குறித்த கவலையில் இருக்கும் பிரான்ஸ் வாழ் பிரித்தானியர்களுக்காக, பிரித்தானிய தூதரகம் கூட்டங்களை நடத்துகிறது.

பிரித்தானிய தூதரகம், Brexitக்கு பின் பிரான்சில் தங்கள் நிலை குறித்த கவலையில் இருக்கும் பிரான்ஸ் வாழ் பிரித்தானியர்களுக்காக, பாரீஸிலும் Limoges நகரிலும் கூட்டங்களை நடத்துகிறது.

Brexit குறித்த தற்போதைய நிலவரம் குறித்து பிரித்தானிய குடிமக்களுக்கு விளக்குவதற்காகவும், Brexit குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகவும் பிரித்தானிய தூதரகம் இந்த இரண்டு கூட்டங்களையும் நடத்துகிறது. முதல் கூட்டம் ஏப்ரல் மாதம் 29 அன்று மாலை பாரீஸில் நடந்தது.

இரண்டாவது கூட்டம், Limoges நகரில் மே மாதம் 16ஆம் திகதி மதியம் 12.30 முதல் 2.30 வரை 3 Rue du Mas Bilierஇல் அமைந்துள்ள Landouge ஹாலில் நடைபெற இருக்கிறது.

கூட்டத்தில் என்ன விடயங்கள் பேசப்படும் என்பது குறித்து திட்டமிடப்படவில்லை என்றாலும், பிரித்தானியர்கள் வாழிட உரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டுமா, சட்டப்பூர்வமாக பிரான்சில் வாழ்வதற்கு எந்த அளவு வருவாய் இருக்க வேண்டும் என்பது குறித்த விடயங்கள் கூட்டத்தில் அலசப்படும் என்று தெரிகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers