பிரான்சில் வீடு ஒன்றில் சிக்கிய வெள்ளைப்புலி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தென் கிழக்கு பிரான்சில் விலங்குகளை கடத்துபவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் வீட்டிலிருந்து வெள்ளைப் புலிக்குட்டி ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் அவரது தாயின் வீட்டிலிருந்து மலைப்பாம்புகள், அழிவின் விளிம்பிலிருக்கும் marsupial என்னும் விலங்குகள் ஆகியவற்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

சட்ட விரோதமாக lemur எனப்படும் விலங்குகள் ஒரு குறிப்பிட்ட வீட்டிலிருந்து விற்கப்படுவதாக பொது சுகாதார துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அந்த குறிப்பிட்ட நபரின் வீட்டை சோதனையிட்டனர்.

அந்த நபர் சுமார் 17,000 யூரோக்கள் வரை மடகாஸ்கரைச் சேர்ந்த ஒரு நபரிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை பணம் கொடுத்தவரிடம் விலங்குகளை ஒப்படைக்கவில்லை என்றும் பிரான்ஸ் பொலிசார் தெரிவித்தனர்.

அவரது வீட்டில் நடத்திய சோதனையில் வெள்ளைப் புலிக்குட்டி ஒன்று கைப்பற்றப்பட்டதோடு, அவரது தாயின் வீட்டில், நான்கு sugar glider என்னும் விலங்குகள், ஒன்பது பாம்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அந்த நபர், ஏற்கனவே அவர் மீது மோசடி வழக்கு ஒன்று இருப்பதையடுத்து உடனடியாக எட்டு மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரான்சில் வன விலங்குகளை சட்ட விரோதமாக கடத்துவதற்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் 15,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படும்.

கைப்பற்றப்பட்ட Hermes என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வெள்ளைப் புலிக்குட்டி தென்கிழக்கு பிரான்சிலுள்ள Barben வன விலங்குகள் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்