256 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் மாயமானதாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸிலிருந்து மும்பை புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று ராடாரிலிருந்து மறைந்ததாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

விமானங்களை ட்ராக் செய்யும் இணைய அடிப்படையிலான FlightRadar24 என்னும் அமைப்பு, அந்த விமானத்தின் சிக்னல் கிடைக்காமல் போனதைத் தொடர்ந்து விமானம் ராடாரிலிருந்து காணாமல் போனதாக தெரிவித்திருந்தது.

ஆனால் ஏர் பிரான்ஸ் நிறுவனமோ தங்களுக்கு சிக்னல் கிடைக்க தவறவில்லை என்று தெரிவித்துள்ளது.

உண்மையில், அந்த விமானத்தில் காற்றை உள் வெளியே கொண்டு செல்லும் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதையடுத்து அந்த விமானம் ஈரானில் தரையிறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஈரானிலுள்ள Isfahan நகரின்மீது பறக்கும்போது, திடீரென விமானம் கீழ் நோக்கி செல்லத்தொடங்கியதையடுத்து, பைலட் ஒருவர் அவசர உதவி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அதனால் அந்த விமானம் மத்திய ஈரானிலுள்ள Isfahan நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இத்தகைய சூழலில் தரையிறக்குவது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும், அது சாதாரண செயல்முறைகளில் ஒன்றுதான் என்றும் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் 256 பயணிகளும் 11 விமான ஊழியர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்