கணவரை கருணைக்கொலை செய்ய விரும்பும் மனைவி, எதிர்க்கும் பெற்றோர்: முடிவு?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் சிக்கி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உடல் உறுப்புகள் செயல்படாமல் படுக்கையில் இருந்த ஒருவரை கருணைக்கொலை செய்ய அவரது மனைவி கோரிய நிலையில் அவரது பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

வின்சென்ட் லாம்பெர்ட் (42) 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில் அவரது உடல் பாகங்கள் செயலிழந்தன.

பத்தாண்டுகளுக்கும் மேலாக படுக்கையில் உணர்வற்று கிடக்கும் தன் கணவரை கருணைக்கொலை செய்ய அவரது மனைவி விரும்புகிறார்.

ஆனால் கத்தோலிக்க பின்னணி கொண்ட அவரது பெற்றோர் லாம்பர்ட் தொடர்ந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

லாம்பர்ட்டுக்கு அளிக்கப்பட்டுள்ள உயிர் காப்பு கருவிகள் நீக்கப்பட்டு அவரை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கலாம் என்ற ஒரு பிரெஞ்சு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

ஆனால் தனது மகன் கடத்திச் செல்லப்படலாம் என்று லாம்பெர்ட்டின் தந்தை தெரிவித்த அச்சத்தின் காரணமாக அவரை கருணை கொலை செய்ய அனுமதிக்கும் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய மருத்துவக்குழு கருணைக்கொலை தொடர்பாக மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அவரை கருணைக்கொலை செய்யக்கூடாது என்று முன்னர் செய்யப்பட்ட சில முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் கருவிகள் முதலானவை அகற்றப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

உடற்குறைபாடுகள் கொண்டோருக்கான ஐக்கிய நாடுகள் கமிட்டி, லாம்பெர்ட்டின் விடயத்தில் தலையிடுமாறு பிரான்சைக் கேட்டுக் கொண்டது.

ஆனால் தாங்கள் அந்த கமிட்டிக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல என்று பிரான்சின் சுகாதாரத்துறை தெரிவித்து விட்டது.

லாம்பெர்ட்டின் மருத்துவர் வின்சண்ட் சான்ச்செஸ் அவரது செயற்கை சுவாசக் கருவிகள் அகற்றப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே இன்று அவருக்கு உணவளித்தல், செயற்கை சுவாசம் மற்றும் மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தது ஆகிய அனைத்தும் நிறுத்தப்பட உள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்