அமெரிக்க, சீனா வர்த்தக போர்... உலக நாடுகள் தங்களுக்குள் சுருங்கிவிட்டது - அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

Report Print Abisha in பிரான்ஸ்

உலக நாடுகள் தங்களுக்குள் சுருங்கி ஒற்றுமையின்றி காணப்படுவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜி7 உச்சி மாநாட்டில் பேசிய அவர், இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் வர்த்தகப் பிரச்சினை அவ்விரு நாடுகளை மட்டும் பாதிப்பதில்லை. ஒட்டுமொத்த உலகையே பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள்ளே சுருங்கி வருகின்றன. பிற நாடுகளுடன் நல்ல உறவை மேற்கொள்ள அவை முன்வருவதில்லை. இது ஆரோக்கியமான போக்கு கிடையாது. இது மிக மோசமான விளைவையே ஏற்படுத்தும். உலக வளர்ச்சிக்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதை நோக்கி பயணிப்பதே நம்முடையே நோக்கமாக இருக்கவேண்டும். என்று தற்போது அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே நிகழ்ந்து வரும் வர்த்தகப் போர் குறித்து தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers