பிரான்சில் இன்று முதல் மாணவர்களுக்கு இது இலவசம்... வெளியான முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் புதிய கல்வி ஆண்டுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு இன்று முதல் இலவச மெற்றோ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகர சபையில் கடந்த ஜுன் மாதம் பள்ளி மாணவர்களுக்கு இலவச மெற்றோ வசதி ஏற்பாடு செய்து கொடுப்பது பற்றி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன் பயனாக இன்று முதல் பாரிசில் புதிய கல்வி ஆண்டுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதனால் 300,000 பாடசாலை மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகரசபையினால் 4 வயதில் இருந்து 11 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 100 வீத இலவச போக்குவரத்து இன்றுமுதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இவர்களுக்காக வழங்கப்படும் Imagine R அட்டையினை நீங்கள் பணம் செலுத்தி பெற்றுக்கொண்டதன் பின்னர், மீண்டும் நீங்கள் பணத்தை திருப்பி கோரவேண்டும். நீங்கள் செலுத்திய பணம் முழுவதுமாக உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் இல்-து-பிரான்சுக்குள் ஒரு குழந்தைக்கு வருடத்துக்கு 350 யூரோக்கள் பயணத்துக்காக செலவிடுகின்றார்கள்.

இந்த தொகை முழுவதுமாக திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீதம் விலைக்கழிவு உண்டு. இதையும் பணத்தினை மீள கோரி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers