பாரிஸ் சாலையில் பிரித்தானியா தம்பதியினருக்கு நேர்ந்த கதி: மர்ம நபர்கள் செய்த ஆட்டுழியத்தை விவரித்த காதலன்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரித்தானியா ஜோடி மீது மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி காரில் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 1ம் திகதி அதிகாலை பாரிஸின் Place de la Bastille பகுதியில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்ட பிரித்தானியா ஜோடி, வீட்டிற்குச் செல்லும்போது பிரான்ஸ் குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

லிவர்பூலைச் சேர்ந்த 27 வயதான கிறிஸ்டோபர் வில்லியம்ஸ் மற்றும் அவரது காதலி 21 வயதான ரெபேக்கா கெவன் மீது இக்கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வில்லியம்ஸ் கூறியதாவது, சம்பவத்தன்று ஹாலோவீன் கொண்டாட்டத்திற்கு பின் grim reaper உடையில் நானும், Playboy bunny உடை அணிந்து படி கெவனும் நடந்துச்சென்றோம்.

dailymail.co.uk

அப்போது, திடீரென காரில் வந்த நான்கு பேர் கெவனை கடுமையாக திட்டினார்கள். நான் காருக்கு அருகே சென்ற போது, ஜன்னல் வழியாக என்னை பிடித்துக் கொண்டு காருடன் தரதர வென இழுத்துச்சென்றனர்.

பின்னர், வாகனத்தை நிறுத்தி என்னை சாலையில் போட்டு சரமாரியாக தாக்க தொடங்கினர். தடுக்க வந்த கெவனையும் சரமாரியாக தாக்கினர். சம்பவயிடத்தில் மக்கள் கூட தொடங்கியதை அறிந்த மர்ம நபர்கள், சம்பவயிடத்தில் இருந்து உடனே தப்பிச்சென்று விட்டனர் என வில்லியம்ஸ் கூறினார்.

dailymail.co.uk

இது எதிர்பாராத தாக்குதல் என விவரித்த பாதிக்கப்பட்ட வில்லியம்ஸ், பிரித்தானியர்களிடம் இனி மேற்கு ஐரோப்பிய நாடுகளில் விடுமுறையை கொண்டாட திட்டமிடுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்