பிரான்சிலிருந்து வெளிநாட்டிற்கு கழிவு பொருட்களை அனுப்பிய நிறுவனத்திற்கு அபராதம்... எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் இருந்து மலேசியாவுக்கு பெருமளவிலான கழிவு பொருட்களை அனுப்பிய நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் இருக்கும் பிரபல நிறுவனம் ஒன்று பல்வேறு கொள்கலன்களில் நெகிழி கழிவுகளை மலேசியாவுக்கு ஏற்றி அனுப்புவது தகவல் கிடைத்தது.

இதையடுத்து இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நிறுவனம் 2016 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இந்த செயலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக 870,000 தொன் எடைகொண்ட கழிவுகளை அனுப்பியுள்ளது

இதையடுத்து குறித்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன் படி குறித்த நிறுவனத்துக்கு, €192,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு தடையும் விதித்துள்ளது. ஆனால் அந்த நிறுவனம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்