பிரான்சில் 137 பெண்கள் படுகொலை..! ஊதா நிறக் கடலாக மாறிய நகரங்கள்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் பெண்ணுரிமை மற்றும் பிற வகையான பாலின அடிப்படையிலான வன்முறைகளைக் கண்டித்து நாட்டின் பல நகரங்களில் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.

மேற்கு ஐரோப்பாவில் குடும்ப வன்முறைகளுடன் தொடர்புடைய கொலை விகிதங்கள் அதிகமுடைய நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் உள்ளது.

இந்த ஆண்டு மட்டும் குறைந்தது 115 பெண்கள் தங்கள் கணவர்களால் அல்லது முன்னாள் கணவர்களால் கொல்லப்பட்டதாக உள்ளுர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவர நிறுவனமான யூரோஸ்டாட், பிரான்சில் கணவர்களால் 2017ல் 123 கொலைகள் நடந்ததாக கூறுகிறது. அதேசமயம் பிரான்சில் இந்த ஆண்டு மட்டும் 137 பெண்கள் கொல்லப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள் தெரிவித்துள்ளது.

அதை நினைவுப்படுத்தும் வகையில் போராட்டக்காரர்கள் சிலர் தங்களது உடலில் 137 என எழுதியிருந்தனர்.

இப்பிரச்னைகளை கண்டித்து நாடு முழுவதும் உள்ள நகரங்களில் சுமார் 30 பேரணிகள் பல குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்டன.

பாரிஸில், தலைநகரின் மையத்தில் உள்ள ஓபரா அருகே பேரணி தொடங்கியது. போராட்டக்காரர்களில் ஆயிரக்கணக்கானோர் ஊதா நிற பதாகைகளை சுமந்துச் சென்றதால் நகரம் முழுவதும் ஊதா நிறக் கடலாக மாறியது.

reuters

பிற முக்கிய நகரங்களிலும் பேரணிகள் நடத்தப்படுகின்றன. தெற்கு துறைமுகமான மார்சேயில், ஆர்ப்பாட்டக்காரர்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட சிலரின் பெயர்களைக் கொண்ட பலகைகளை சுமந்துச் சென்றனர்.

#NousToutes (நாம் அனைவரும்) என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, இப்பிரச்னையை அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை என போராட்டக்காரரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

nbcnews

இந்நிலையில், குடும்ப வன்முறையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் திங்கள்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் அரசாங்கத்தால் ஆலோசனைகள் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதகளின் முடிவில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது குடும்ப வன்முறைக்கு எதிரான குறிப்பிட்ட நடவடிக்கைகளின் விளைவாக அமையும் என்று பிரச்சாரகர்கள் நம்புகின்றனர்.

செப்டம்பர் மாதத்தில், அரசாங்கம் 1,000 அவசரகால இடங்களை உருவாக்குதல் மற்றும் அடுத்த ஆண்டு முதல் அவசரகால தங்குமிடம் உள்ளிட்ட பல அவசர நடவடிக்கைகளை அறிவித்தது, மேலும் பெண்களின் புகார்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதைக் காண 400 காவல் நிலையங்களுக்கு அனுமதி அளித்தது.

பெண்ணுரிமைக்கு எதிரான போராட்டத்திற்கு 5 மில்லியன் யூரோ நிதியளிக்கப்படும் என்றும், புகார்கள் நடைமுறை எளிமைப்படுத்தப்படும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பெண்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும், மேலும் அவர்களது கணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் எட்வார்ட் பிலிப் கூறினார்.

பெண்களை மேலும் வன்முறையிலிருந்து பாதுகாக்க, குடும்ப வன்முறைக்காக தண்டனை பெற்றவர்கள் அல்லது தடை உத்தரவின் கீழ் உள்ளவர்கள் மின்னணு வளையல் அணிய வேண்டும் என்ற கருத்தையும் பிரதமர் முன்வைத்தார் என்பது நினைவுக்கூரதக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்