13 பேரின் உடல்களை பார்த்து பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் உருக்கம்... யுத்த நினைவிடத்தில் பொறிக்கப்படும் என உறுதி

Report Print Santhan in பிரான்ஸ்

மாலி நாட்டில் விமான விபத்தில் உயிரிழந்த 13 வீரர்களுக்கான அஞ்சலியின் போது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் மிகவும் உருக்கமாக பேசினார்.

மாலியின் Invalides முற்றத்தில் இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகின. 13 பிரான்ஸ் இராணுவ வீரர்களுளின் உடல்களும் பார்வைக்கு வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஊடகத்தினர் உட்பட 2,500 க்கும் மேற்பட்டவர்கள் கூடியிருக்க, இராணுவ அணிவகுப்புடன் தேசிய கொடி போர்த்தப்படு 13 உடல்களும் கொண்டுவரப்பட்டது. அப்போது ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் இம்மானுவல் மேக்க்ரோன் மிக உருக்கமாக உரையாற்றினார், அதில்,13 இலக்குகள், 13 முகங்கள், 13 உயிர்கள் என வீரர்களை அடையாளப்படுத்திய அவர் 13 வீரர்களின் பெயர்களும் யுத்த நினைவிடத்தில் பொறிக்கப்படும் என கூறினார்.

13 இராணுவ வீரர்களின் பெயர்களையும் உச்சரித்து அவர்களுக்கான அஞ்சலியையும், குடும்பத்தினருக்கான இரங்கல் செய்தியினையும் தெரிவித்தார்.

பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள André-Citroën பூங்காவில் நவம்பர் 11, 2019 ஆம் ஆண்டு திகதி பொறிக்கப்பட்ட ஒரு நினைவு தூபி கட்டப்படும் எனவும் மேக்ரோன் தெரிவித்தார்.

தவிர, உயிரிழந்த 13 வீரர்களுக்கும் உயரிய மரியாதையான la légion d'honneur பட்டத்தினை இம்மானுவல் மக்ரோன் சூட்டினார்.


மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்