பிரான்சில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் இருக்கு? பீதியில் மக்கள்! வெளியான நாடுகளின் பட்டியல்

Report Print Santhan in பிரான்ஸ்

சீனா மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இப்போது பிரான்ஸில் பரவியுள்ளதாகவும், மூன்று பேருக்கு இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களாகவே உலக மக்களை மிரட்டி வரும் செய்தி என்றால், அது கொரோனா வைரஸ் தான், ஏனெனில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து, மற்றவர்களுக்கு எளிதில் பரவுவதால் பீதியில் உள்ளனர்.

இந்த வைரஸின் தாக்க ஆரம்பிக்கப்பட்ட இடம் சீனாவின் வுஹான் பகுதி, இந்த நகரத்தில் இருக்கும் மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னர் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற சிலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால், இது மெல்ல, மெல்ல அமெரிக்கா, கொரியா போன்ற நாடுகளுக்கு பரவியுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு இல்லை என்று நிம்மதி பெரு மூச்சு விட்ட நிலையில், பிரான்சில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் இரண்டு நோயாளிகள் தலைநகர் பாரிஸில் இருக்கும் மருத்துவமனையில் இருப்பதாகவும், மற்றொரு நபர் Bordeaux-ல் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் சுகாதார துறை அமைச்சர் Agnes Buzyn, இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டு பேரின் உறவினரான ஒருவருக்கும் இந்த நோய் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மூன்று பேரில் ஒரு நோயாளிக்கு 48 வயது இருக்கும் எனவும், அவர் சில தினங்களுக்கு முன்பு தான் சீனாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குறித்த நபர் ஒரு தனியறையில் வைக்கப்பட்டு, கவனமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர் வெளியுலகை பார்ப்பதற்கு இப்போதைக்கு அனுமதிக்கப்படவில்லை, ஆனால் அவர் நல்ல நிலையில் இருக்கிறார் என்று Agnes Buzyn கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பிரான்சில் இந்த நோய் அடியெடுத்து வைத்துள்ளதால், அங்கிருக்கும் மக்கள் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, தாய்வான், சிங்கப்பூர், தாய்லாந்து, அவுஸ்திரேலியா, நேபாள், வியட்நாம், ஹாங்காங், மாகூகு, மலேசியா போன்ற நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்