27 ஆண்டுகளாக பிரான்சில் வாழும் பிரித்தானியருக்கு குடியுரிமை மறுப்பு: பிரெக்சிட் ஏற்படுத்தியுள்ள பயம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரித்தானியர் ஒருவர் 27 ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்துவரும் நிலையில், அவரது குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதையடுத்து, பிரெக்சிட்டைத் தொடர்ந்து என்ன ஆகுமோ என்ற பயத்தில் இருக்கிறார் அவர்.

தச்சு வேலை செய்பவரான Mark Lawrence (48), பிரெஞ்சுக் குடிமக்களான தனது பிள்ளைகளுடன் 27 ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்து வருகிறார்.

மொழி மற்றும் கலாச்சாரத் தேர்வுகளில் அவர் வெற்றி பெற்றுவிட்டாலும், அவரது வருவாய் குறைவாக இருப்பதால், அவர் தொழில் ரீதியாக பிரெஞ்சு மக்களுடன் போதுமான அளவு இணைந்து வாழவில்லை என்று பிரெஞ்சு குடியுரிமை அதிகாரிகள் கருதுகிறார்கள்.

இதில் பிரெக்சிட் வேறு நெருங்கிவிட்டதால், அடுத்து என்ன செய்வது என்ற எண்ணம் தன்னை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கிறார் Lawrence.

ஆனால், பிரெக்சிட்டைப் பொருத்தவரையில், குடிமக்களின் உரிமைகளுக்குதான் முக்கியத்துவம் என்பதால் இப்போதைக்கு பிரச்சினையில்லை.

BBC

ஐரோப்பிய ஒன்றியத்திலிருக்கும் பிரித்தானியர்களுக்கும், பிரித்தானியாவிலிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கும் தடையில்லா போக்குவரத்து டிசம்பர் 31 வரை தொடரும்.

அதற்குப்பின் என்ன நடந்தாலும், அது பல மில்லியன் மக்களை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பிரான்சில், இந்த ஆண்டில் முதலில் நிகழவிருக்கும் மாற்றம், பிரித்தானியர்கள் உள்ளூர் தேர்தல்களில் பங்கேற்க முடியாது என்பது மட்டும்தான்.

என்ன நடக்கப்போகிறது என்பது உண்மையாகவே தெரியவில்லை என்று கூறும் Lawrence இப்போதைக்கு நாடு கடத்தப்படும் அபாயத்தில் இல்லை என்பது மட்டும் ஒரே ஆறுதல்.

அவரது குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு ஆதரவாக நல்ல முடிவெடுக்குமாறு கோரி, 33,000 பேர் மனு ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers