கொரோனா கட்டுப்பாடுகளால் முற்றிலும் எதிர்பாராத கோணத்தில் பாதிக்கப்படும் செவித்திறனற்றோர்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

உலகம் முழுவதையுமே கொரோனா அச்சத்துக்குள்ளாக்கிவிட்ட நிலையில், மாஸ்குகள் கொரோனாவை தடுப்பதில் பயனளிப்பவையாக உள்ளன.

பிரான்ஸ் கட்டுப்பாடுகளை நெகிழ்த்திவரும் நிலையில், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதற்கும், கடைகளுக்கு செல்வதற்கும் மக்கள் மாஸ்குகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், கேட்கும் திறனற்றோர் என்ன செய்வார்கள்?

உதட்டசைவை வைத்து மற்றவர்கள் பேசுவதை புரிந்துகொள்வோரும், முகபாவனைகளை வைத்து முக்கிய வார்த்தைகளை புரிந்துகொள்வோருமான கேட்கும் திறனற்றோரைப் பொருத்தவரை, அவர்கள் அன்றாடம் ஒருவரோடொருவர் தொடர்புகொள்ள மாஸ்குகள் பெரும் தடையாகிவிட்டன.

இதை விவரிப்பது கடினம், என்றாலும் இது மிக பயங்கரமாக உணர வைக்கிறது என்கிறார்

பிரான்சின் உடற்குறைபாடுகள் கொண்டோருக்கான ஆலோசனை கவுன்சிலின் தலைவரான Jérémie Boroy. பிரான்ஸ் மக்கள்தொகையில் சுமார் எட்டு சதவிகிதத்தினர் கேட்கும் திறனற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்