இறைச்சி வெட்டும் தொழிற்சாலைகளை குறிவைத்து தாக்கும் கொரோனா: இம்முறை சிக்கியது பிரான்ஸ்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பல நாடுகளில் இறைச்சி வெட்டும் தொழிற்சாலைகளை குறிவைத்து தாக்கி வருகிறது கொரோனா வைரஸ்!

ஜேர்மனி, ஸ்பெயின், அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரேசில் என பல நாடுகளில் இறைச்சி வெட்டும் தொழிற்சாலைகள் கொரோனாவின் குறியில் சிக்கியுள்ள நிலையில், தற்போது பிரான்சும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.

மேற்கு பிரான்சிலுள்ள Cotes d'Armor என்ற இடத்தில் அமைந்துள்ள இறைச்சி வெட்டும் தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்

பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அங்கு பணியாற்றும் 818 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறைச்சி வெட்டும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் நெருக்கமாக நின்று பணியாற்றவேண்டிய சூழல் இருப்பதுதான் இதற்கு காரணம் என கருதப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்