ஐரோப்பாவிற்கான எல்லைகள் எப்போது திறக்கப்படும்! பிரான்சிற்கு தடை விதித்த 180 நாடுகள்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு 180 நாட்கள் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், வரும் ஜுன் மாதம் 15-ஆம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளான எல்லைகள் அனைத்தும் திறக்கப்படும் என்று வெளிவிகாரங்கள் மற்றும் சுற்றுலாத் துறைக்கான அரசாங்கச் செயலாளர் Jean-Baptiste Lemoyne கூறியுள்ளார்.

பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக 189,220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 28,940 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் பரவலை தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளான எல்லைகளை அந்நாட்டு அரசு மூடியது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளான எல்லைகள் அனைத்தும், ஜுன் 15-ஆம் திகதி திறக்கப்படும். அதனைத் தாணடிய உலகத்திற்கான எல்லைகள் மேலும் சிலவாரங்களிற்கு மூடப்பட்டே இருக்கும் என வெளிவிகாரங்கள் மற்றும் சுற்றுலாத் துறைக்கான அரசாங்கச் செயலாளர் Jean-Baptiste Lemoyne தெரிவித்துள்ளார்.

மேலும் ஜுலை நடுப்பகுதிக்குப் பின்னர் இந்த எல்லைகள் விரிவடையும் என நம்புவதாகவும், தொடர்ந்தும் 180 நாடுகள், பிரான்ஸ் குடிமக்களுக்கு தடைவிதித்துள்ளதால், பயணம் செய்வது மிகவும் கடினமாக உள்ளதாக Jean-Baptiste கூறியுள்ளார்

பிரான்சின் கொரோனத் தொற்றினால் உலகத்தின் 90 நாடுகள் பிரான்சைத் தடைசெய்திருப்பது நினைவுகூரத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்