கவனம் ஈர்த்துள்ள பிரான்ஸ் பிரதமரின் தாடி: கொரோனா நேரத்தில் அதிகரித்துள்ள வெண் தாடியும் புகழும்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் கொரோனா அதிகரித்ததைப் போலவே, பிரான்ஸ் பிரதமரின் தாடியிலுள்ள வெண்மையும் அதிகரித்தது தொலைக்கட்சியில் அவரை பார்த்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

பிரான்ஸ் பிரதமர் Édouard Philippe, கொரோனா குறித்த தகவல்கள் முதல் ஊரடங்கு விதிகள் வரை அறிவிக்க தொலைக்காட்சியில் தோன்றும்போதெல்லாம் அவரது கன்னத்திலுள்ள தாடியின் வெண்மையும் அதிகரித்ததைக் மக்கள் கவனிக்கத் தவறவில்லை.

அதற்கு காரணம் அதிகரிக்கும் அவரது வயதா, புகழ் குறைந்துகொண்டே வரும் அவரது ஜனாதிபதி மேக்ரான், புகழ் அதிகரித்துக்கொண்டே வரும் தன்னை வேலையிலிருந்து அகற்றப்போகிறார் என வதந்திகளை தொடர்ந்து கேட்டதால் ஏற்பட்ட மன அழுத்தமா? என்ற கேள்விகள் மக்களின் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தன.

Photograph: Reuters

ஒரு வழியாக, மேக்ரான் சென்ற வாரம் மக்கள் சாதாரண வாழ்வுக்கு திரும்பலாம் என்று அறிவிக்க, அதற்குப் பிறகுதான் மக்கள் மனதில் உறுத்திக்கொண்டேயிருந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரதமர் Édouard Philippe.

அது ஒன்றும் சீரியஸான விடயமில்லை, அது வலிக்கவும் இல்லை, மற்றவர்களுக்கு தொற்றவும் செய்யாது, எனது கன்னத்தின் தோலிலும் முடியிலும் ஏற்பட்டுள்ள வெண் புள்ளிகள் என்னும் பிரச்சினைதான் அது என்றார் Édouard Philippe.

Édouard Philippe பிரதமர் இல்லத்தில் கால் வைக்கும்போது, அவரை அதிகமாக யாருக்கும் தெரியாது.

நாட்டின் சுகாதார பிரச்சினை, அதாவது கொரோனாவின்போது, அவருக்கும் ஜனாதிபதி மேக்ரானுக்கும் நடுவில் உள்ள உறவுமுறையில் ஏற்பட்ட பதற்றம் அதிகரித்துக்கொண்டே வந்ததாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்தன.

ஆனால், எப்படி அவரது கன்னத்திலுள்ள தாடியில் வெண்மை அதிகரித்ததோ அதேபோல், அவரது புகழ் மக்களிடையே 54% சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் புகழோ சுமார் 38% ஆக உள்ளதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஆய்வில் பங்கேற்ற 61 சதவிகிதம்பேர் பிரதமரை மாற்றுவதை விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Photograph: Ludovic Marin/AFP/Getty Images

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்