பிரான்சை நோக்கி காரில் சென்ற பிரித்தானியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! பெட்டியில் ஒளிந்திருந்த அகதிகள்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் சுற்றுலாப் பயணிகள் பயணித்த காரின் உள்ளே இரண்டு அகதிகள் மறைந்து வந்திருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

பிரித்தானியாவை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் சிலர் கார் ஒன்றில், கடந்த வியாழக்கிழமை கார் ஒன்றில் பிரான்சின் Vendée நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் A29 நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவர்கள் காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த பெட்டியின் உள்ளே ஏதோ ஒரு சத்தம் வருவதைக் கண்டு காரை நிறுத்தியுள்ளனர்.

அதன் பின் அந்த பெட்டியை எடுத்து திறந்து பார்த்த போது, அதில் அவர்களின் உடைகள் எல்லாம் காணமல் போய், அதற்கு பதிலாக இரண்டு அகதிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவர்களில் ஒருவர் எரித்திரியா மற்றொருவர் கினியா நாட்டினைச் சேர்ந்த 16 வயதுடைய அகதிகள் என்பது தெரியவந்தது. காரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன், உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்திற்கு முதல் நாள் குறித்த சுற்றுலாப் பயணிகள் பா து கலேயில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். அதன் போது குறித்த அகதிகள் காரின் பெட்டிக்குள் ஏறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

தப்பி ஓடிய அவர்களை உள்ளூர் பொலிசார் பிடித்துவிட்டு, அதன் பின் விடுவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்