குளிரில் நடுங்கியபடி கிடந்த வெளிநாட்டவர் கொடுத்த தகவல்... பிரெஞ்சு கடற்கரையில் கிடைத்த உடல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
2012Shares

கடற்கரையில் குளிரில் நடுங்கியபடி இருந்த வெளிநாட்டவர் ஒருவரை பொலிசார் மீட்ட நிலையில், அவர் தன்னுடன் வந்த நண்பரைக் காணவில்லை என்று தெரிவித்தார்.

தண்ணீரில் நனைந்து ஹைப்போதெர்மியா என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அந்த 16 வயது நபர் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்.

தானும் தன் நண்பனும் ஒரு சிறு ரப்பர் படகில் பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கி புறப்பட்டதாகவும், வழியில் படகு கவிழ்ந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தனக்கு நீச்சல் தெரியும் என்பதால் தான் நீந்தி ஆங்கிலக் கால்வாயைக் கடந்துவிட்டதாகவும், தன் நண்பனுக்கு நீச்சல் தெரியாது என்றும் கூறினார். உடனே ஹெலிகொப்டர் உதவியுடன் மீட்புக் குழுவினர் அந்த இளைஞனை தேடிப் புறப்பட்டனர்.

ஆனால், அவர்களால் அந்த இளைஞனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில மணி நேரத்திற்குப்பின், வட பிரான்ஸ் கடற்கரையில் Sangatte பகுதியில் ஒரு இளைஞனின் உயிரற்ற உடல் ஒதுங்கியுள்ளது.

அந்த உடல் இன்னமும் முறைப்படி அடையாளம் காணப்படவில்லை. ஆனால், அது அந்த சூடான் இளைஞனுடன் படகில் பயணிக்கும்போது கடலில் மாயமான இளைஞனின் உடலாக இருக்கலாம் என உள்ளூர் அலுவலரான Philippe Sabatier தெரிவித்துள்ளார்.

பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்