ஒரே நாளில் 10,000 பேருக்கு கொரோனா தொற்று: என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது பிரான்ஸ்?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் கொரோனா தொற்று துவங்கிய நாள் முதல் இல்லாத அளவிற்கு, நேற்று முன்தினம் மட்டும் (வியாழக்கிழமை), சுமார் 10,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

என்றாலும், மீண்டும் ஊரடங்கை அறிவிப்பதை தவிர்க்கவே விரும்புவதாக பிரான்ஸ் பிரதமர் Jean Castex தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர், பிரான்சில் கொரோனா தொற்று பரவலின் நிலை நிச்சயம் மோசமானதாக உள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அதன் தீவிரம் இன்னமும் குறையவில்லை என்றார்.

அத்துடன், இன்னும் சில மாதங்களுக்கு கொரோனா நம்முடன்தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

என்றாலும், பெரிய அளவில் கட்டுப்பாடுகள் எதையும் அவர் புதிதாக அறிவிக்கவில்லை. பிரான்சின் நோக்கம், மீண்டும் மொத்தமாக நாட்டை முடக்குவதை தடுப்பதும், சமூக விலகல், மாஸ்க் அணிதல் மற்றும் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் கொரோனாவுடன் வாழ்ந்து காட்டுவதும்தான் என்றார் அவர்.

தனது அரசு, கொரோனா தாக்கியவர்களில் யாருக்கு பரிசோதனை செய்வதில் முதலிடம் கொடுப்பது என்பது தொடர்பான விடயங்களை அமுல்படுத்த இருப்பதுடன், வர்த்தகம் குறைவான நேரம் மட்டுமே நடப்பதை உறுதி செய்ய உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பிரதமர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்