பிரான்சில் ஐபோன் விற்பதில் சிக்கல்! சட்டத்திற்கு பணிந்த ஆப்பிள் நிறுவனம்: இனி கூடவே இது கிடைக்கும்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் ஐபோன் விற்பனை செய்வதில் புதிய சிக்கல் எழுந்ததையடுத்து, ஆப்பிள் நிறுவனம் பிரான்ஸ் சட்டத்திற்க்கு பணிந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் நேற்று, அதாவது கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் திகதி தனது புதிய ஐபோன் மொடல்களான, iPhone 12 min, iPhone 12, iPhone 12 Pro மற்றும் iPhone 12 Pro Max போன்ற நான்கு புதிய திறன் பேசிகளை அறிமுகம் செய்தது.

ஏற்கனவே சில ஆண்டுகளாக தொலைபேசியுடன் இயர்போன் வழங்குவதை நிறுத்தியிருந்த ஆப்பிள் நிறுவனம் இந்த முறை, சார்ஜரை தொலைபேசியோடு வழங்கவில்லை.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தேவைப்படும் நபர்கள் தனியே அதை பணம் செலுத்தி வாங்கவேண்டும் என ஆப்பிள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பிரான்சில் அந்த முடிவு செல்லுபடி ஆகாது. கடந்த 2010-ஆம் ஆண்டு, ஜுலை 12-ஆம் திகதி அன்று இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் படி, ஒவ்வொரு தொலைபேசி நிறுவனமும் தங்களுடைய தொலைபேசியுடன் இயர்போன் மற்றும் ஏனைய 'துணை' பொருட்களை வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், ஆப்பிள் நிறுவனம் தனியாக விற்பனை செய்யும் 19 யூரோ மதிப்பிலான் இயர்போன் மற்றும் 30 யூரோ மதிப்பிலான சார்ஜர் ஆகிய இரண்டையும் தொலைபேசியோடு இலவசமாக வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனமும் இந்த சட்டத்துக்கு பணிந்துள்ளதாகவும், பிரான்ஸ்க்காக பிரத்யேக பெட்டிகளை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்