பிரான்ஸ் ஜனாதிபதியின் தொலைக்காட்சி உரை: எட்டு முக்கிய அறிவிப்புகள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நேற்று இரவு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

மேக்ரானின் உரையில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் இவைதான்

இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு

17 அக்டோபர் சனிக்கிழமை முதல் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை Ile-de-France பகுதி, Grenoble, Lille, Lyon, Aix-Marseille, Montpellier, Rouen, Saint-Etienne மற்றும் Toulouse ஆகிய பகுதிகளில் ஊரடங்கு.

ஊரடங்கை மீறுவோருக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.

ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல கட்டுப்பாடுகள் கிடையாது

விடுமுறையைக் கழிக்க செல்வதற்கு மக்களுக்கு தடையில்லை, ஆனால் பயணம் செய்யும்போது கை கழுவுதல், தும்மும்போது மூக்கை முழங்கையால் மூடுதல், சமூக

இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் மாஸ்க் அணிதல் ஆகிய கட்டுப்பாடுகளை பின்பற்ற தவறக்கூடாது.

பிரித்தானியாவைப்போலவே, ஆறு பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடக்கூடாது.

அரசின் சிறப்பு உதவி

அடுத்த ஆறு வாரங்களுக்கு Revenu de Solidarité Active என்னும் திட்டத்தின் கீழ் அரசு உதவி பெறுவோருக்கு பெரியவர்களுக்கு 150 யூரோக்களும், சிறியவர்களுக்கு 100 யூரோக்களும் வழங்கப்படும்.

உணவகங்கள், சுற்றுலா, கலை கலாச்சார நிகழ்வு தொடர்பான துறையிலிருப்போருக்கு தற்காலிக வேலையில்லா நேரத்தின்போது அரசு உதவி அறிமுகம்.

கொரோனா தொற்றியவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை ட்ரேஸ் செய்யும் கோவிட் 18

ஆப் புது வடிவில் மீண்டும் அறிமுகம் அந்த ஆப் இம்மாதம் (அக்டோபர்) 22 அன்று அறிமுகம் செய்யப்படும்.

புதிய அதிவேக கொரோனா சோதனைகள் விரைவில் அறிமுகம்

30 நிமிடங்களில் கொரோனாவைக் கண்டறியும் சோதனைகளில் சில வாரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

வீட்டிலிருந்து வேலை செய்ய அழைப்பு இல்லை.

நிறுவனங்களில் பணி நடக்கவேண்டும் என்பதால் பொதுத்துறை அலுவலகங்கள், பள்ளிகள் இயங்கவேண்டும் என்று கூறியுள்ள மேக்ரான், யாருக்கெல்லாம் வீட்டிலிருந்து பணி செய்ய இயலுமோ அவர்களெல்லாம் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பணி செய்துகொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இவைதான் மேக்ரான் ஆற்றிய உரையின் எட்டு முக்கிய அம்சங்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்