பிரான்ஸில் முழு ஊரடங்கு நீட்டிப்பு! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸில் டிசம்பர் 2ம் தேதிக்கு பின்னரும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உச்சத்தை எட்டியுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ள போதிலும் நாட்டின் சுகாதார அமைச்சர் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.

அக்டேபார் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு டிசம்பர் 2ம் திகதி வரை அமலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்தது.

இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை ஊரடங்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு முடிவுக்கு வரும் தேதி குறித்த தகவலை அளிக்க முடியாது என சுகாதார அமைச்சர் Olivier Veran தெரிவித்தார்.

டிசம்பர் 1ம் தேதி அன்று மக்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்த்தப்படாது என Olivier Veran உறுதிப்படுத்தினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்