பிரான்சுடன் மோதிய பாகிஸ்தான்... காத்திருந்து பிரான்ஸ் கொடுத்த பதிலடி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தன்னுடன் மோதிய பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது பிரான்ஸ். நட்பு நாடுகள் அல்லது தங்களுக்கு உதவும் நாடுகள் விடயத்தில் கவனமாக வார்த்தையை விடவில்லை என்றால் இப்படித்தான் நடக்கும் என பாகிஸ்தானுக்கு பாடம் கற்றுக்கொடுத்துள்ளது பிரான்ஸ்.

இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்திருந்த கருத்துக்களை கடுமையாக விமர்சித்திருந்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

அதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் பயன்படுத்தும் பிரான்ஸ் தயாரிப்பான போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை மேம்படுத்துவதற்கு (upgrade) மறுப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது பிரான்ஸ் அரசு.

அத்துடன், தனது விமானங்களில் பணி செய்வதற்கும் பாகிஸ்தான் வம்சாவளியினருக்கு அனுமதி மறுக்கவும் முடிவு செய்துள்ளது பிரான்ஸ்.

தங்கள் போர் விமானங்கள் குறித்த தொழில்நுட்ப ரகசியங்களை அவர்கள் பாகிஸ்தானுக்கு அளிக்க வாய்ப்புள்ளது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 183 பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் விசாக்களை (visitor visas) பிரான்ஸ் ரத்துசெய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்