கொரோனா தடுப்பூசி! மிகவும் பின் தங்கி இருக்கும் பிரான்ஸ்: வெளியான புள்ளி விவரம்

Report Print Santhan in பிரான்ஸ்
91Shares

பிரான்ஸ் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, அது பின் தங்கிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், இப்போது உலகில் சுமார் 250-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஏராளமான உயிர்களை பலி கொண்டுள்ளது.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், இந்த கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் இந்த கொரோனா வைரஸ் புதிதாக உருமாறி தீவிரமாக பரவி வருகிறது.

இந்த உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பிரான்சிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதற்கிடையில் பிரித்தானியா மற்றும் பிரான்சில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, அது பின் தங்கிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 12-ஆம் திகதி நிலவரப்படி பிரானசில் 189.314 பேருக்கு கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன. இந்தத் தகவல் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 20 மில்லியன் பேர், கொரோனாத் தடுப்பு ஊசியின் முதலாம் கட்ட ஊசியைப் போட்டுள்ளனர்.

ஐக்கிய அமெரிக்காவில் 5.92 மில்லியன் மக்களும், சீனாவில் 4.5 மில்லியன் மக்களும், இஸ்ரேலில் 1.69 மில்லியன் மக்களும் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.

ஆனால் பிரான்ஸ் தற்போது தான் இரண்டு இலட்சம் பேருக்கு தடுப்பு ஊசிகளை நெருங்கி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்