பிரான்சில் தீவிரமாக தொடரும் கொரோனா! 50000 பேர் 24 மணி நேரத்தில் பாதிப்பு: முழு தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 308 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் பிரான்ஸை விட்டு வைப்பது போன்று தெரியவில்லல். அந்தளவிற்கு மூன்றாவது கொரோனா அலை தீவிரமாக பரவி வருகிறத.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கொரோனாவால் 50.659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் பாதிக்கப்பட்டவரளின் மொத்த எண்ணிக்கை, நான்கு லட்சத்திற்கு மேலாக் பாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்ப்பாக, நாட்டில் மருத்துவமனைகளில் மட்டும் 69 ஆயிரம் பேரும், முதியோர் இல்லங்களில், 26044 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் 2035 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் மட்டும் கடந்த 24 மணிநேரத்திற்குள் 480 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாளாந்தம் தொடர்ச்சியாக அதிகரித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிராபத்தான நிலையில் 5109 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்