உங்கள் துணையின் இதயத்துடிப்பை அறிய உதவும் இலத்திரனியல் மோதிரம்

Report Print Givitharan Givitharan in கஜெட்ஸ்

இன்றைய காலத்தில் மனிதர்களிடம் மனிதாபிமானமும், உணர்வுகளும் குறைந்து வருகின்றது என்னவோ உண்மைதான்.

இதனை விஞ்ஞானிகள் கருத்தில் கொண்டார்களோ என்னவோ? இவற்றுக்கு நிகரான இலத்திரனியல் சாதனங்களை வடிவமைத்து வருகின்றனர்.

ஆம், தற்போது உங்கள் துணையின் இதயத்துடிப்பினை உடனுக்கு உடன் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் இலத்திரனியல் மோதிரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

HB Ring எனும் இச் சாதனமானது தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.

தற்போது இச் சாதனத்திற்கான முற்பதிவுகள் இடம்பெற்றுவரும் நிலையில் இதன் பெறுமதி 600 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments