ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை இப்படியும் கண்டுபிடிக்கலாம்!

Report Print Jubilee Jubilee in கணணி விளையாட்டு
1570Shares

குழந்தைகளை ஐ பாட்டில் விளையாட்டுகளை விளையாடச் செய்வதன் மூலம் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிய முடியும் என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ மாகாணாத்தில் உள்ள ஸ்ட்ராத்க்ளைட் பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் வளர்ப்பு மற்றும் முன்னேற்ற பிரிவின் மூத்த பேராசிரியராக இருப்பவர் ஜொனாதன் பட்.

இவர் போலந்து நாட்டைச் சேர்ந்த 'ஹரிமட்டா' எனும் நிறுவனத்துடன் சேர்ந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் லண்டனில் இருந்து வெளிவரும் 'சைன்டிபிக் ரிப்போர்ட்ஸ்' என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வில் 3 முதல் 6 வயது வரையுள்ள ஆட்டிச பாதிப்புக்குள்ளான 37 சிறுவர்களை 'மூவ்மெண்ட் சென்சார்கள்' பொருத்தப்பட்ட ஐ பாட் உள்ளிட்ட டேப்லெட்டுகளில் விளையாட்டுகளை விளையாடுமாறு பணிக்கப்பட்டனர்.

அவர்களின் கையசைவுகளை ஆய்வு செய்த பொழுது, அவர்கள் டேப்லெட்டுகளை அதிக விசையுடன் பயன்படுத்துவதும், அவர்களின் கை நகர்த்தல் முறைகளில், ஒரு குறிப்பிட்ட முறையில் விசையின் பயன்பாடு இருப்பதையும் கண்டறிந்தனர்.

இது குறித்து ஜோனாதன் கூறுகையில், இதை ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என்று கூறலாம். ஏனெனில் இதன் மூலம் அதிக செலவு பிடிக்கும் சிகிச்சை முறைகளை நாட வேண்டிய அவசியம் இல்லை.

இருப்பினும், இன்னும் பல ஆய்வுகளை செய்ய வேண்டி உள்ளது. இது குறித்த விரிவான விளக்கங்கள் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments