கணனி ஹேம் பிரியர்களின் பலத்த வரவேற்பினைப் பெற்ற ஹேம்களில் ஒன்றாக Super Mario Run காணப்படுகின்றது.
Nintendo நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட ஹேமில் விரைவில் சில வரப்பிரசாதங்கள் பயனர்களுக்கு அளிக்கப்படவுள்ளது.
இதன்படி புதிய பதிப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ள அதேவேளை அதனைக் கொள்வனவு செய்வதற்கான கட்டணமும் குறைக்கப்படவுள்ளது.
இப் புதிய பதிப்பானது செப்டெம்பர் 29ம் திகதிக்கும் ஒக்டோபர் 12ம் திகதிக்கும் இடையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதனைப் பயனர்கள் 50 சதவீத கட்டணக் கழிவில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
அதாவது முன்னர் 9.99 டொலர்களுக்கு கிடைக்கப்பட்ட இக் ஹேமானது இனி 4.99 டொலர்கள் பெறுமதியில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.