ஜேர்மனியில் அதிகரிக்கும் போலி திருமணம்: அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸ்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் ஐரோப்பிய ஒன்றிய வதிவிடம் பெறுவதற்காக போலி திருமணம் செய்துகொண்ட கும்பல் ஒன்றை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பில் தலைநகர் பெர்லின் முழுமையும் 40 பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார் 4 பெண்கள் உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய கும்பலானது போர்த்துகல் நாட்டில் இருந்து பெண்களை இந்த போலி திருமணத்திற்காக பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி நைஜீரியாவில் இந்த கும்பலானது ஐரோப்பிய ஒன்றிய வதிவிடம் பெற்றுத்தருவதாக கூறி நபர் ஒருவருக்கு தலா 13,000 யூரோ வரை கட்டணமாக பெற்றுள்ளது. இதில் ஒரு பங்கு தொகையான போர்த்துகள்பெண்களுக்கு செலுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.

திருமணத்திற்கான ஜோடிகள் தயாரானதும், போலி திருமண சான்றுகளை தயாரித்து பின்னர் ஜேர்மன் அதிகாரிகளிடம் சமர்ப்பித்து குறித்த கணவருக்கு ஐரோப்பிய ஒன்றிய வதிவிடம் கேட்டு வலியுறுத்துகின்றனர்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் இதுவரை 70க்கும் மேற்பட்ட ஜோடிகள் ஐரோப்பிய ஒன்றிய வதிவிடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது சிக்கியுள்ள கும்பலிடம் இருந்து புகைப்படங்கள், மொபைல் போன், மற்றும் போலி சான்றிதழ்கள், 300,000 யூரோ பணம் என பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

யூரோபோல் மற்றும் போர்த்துகள் அதிகாரிகளின் துணையுடன் இந்த போலி கும்பலை சிக்கவைத்துள்ளதாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற கும்பல்களின் நடவடிக்கைகளால் இனி ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு தஞ்சமளிப்பது என்பது மிகவும் கடினமான விடயமாக அமையும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers