இனப்பாகுபாடு குற்றச்சாட்டை மறுக்கும் ஜேர்மனி உணவு வங்கி

Report Print Balamanuvelan in ஜேர்மனி
124Shares
124Shares
lankasrimarket.com

அகதிகள் பிரச்சினை உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில் தனி நபர்களுக்கு இனி உணவு வழங்கப்படாது என்று அறிவித்ததால் இனப்பாகுபாடு காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜேர்மனியின் Marl நகரில் உள்ள உணவு வங்கி ஒன்று தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

உணவுப்பற்றாக்குறை காரணமாக தனி நபர்களுக்கு தற்காலிகமாக உணவு வழங்க இயலாத நிலைமையில் உள்ளதாக Marl நகரிலுள்ள அறக்கட்டளையின் தலைவராகிய Renate Kampe வியாழனன்று தெரிவித்திருந்தார்.

அதன்படி இனி குடும்பங்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் மட்டுமே உணவு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

Credit:Jens Schwarz

அதிகரித்து வரும் அகதிகளின் எண்ணிக்கை அறக்கட்டளையை இந்நிலைமைக்கு தள்ளியிருப்பதாக Kampe தெரிவித்தார்.

இனப்பாகுபாடு காட்டுவதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, குடும்பங்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் மட்டுமே உணவு வழங்கப்படும் என்னும் இந்த புதிய விதி மக்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதின் அடிப்படையிலானது அல்ல என்றும் ஜேர்மனியிலுள்ளவர்களுக்கும் இதே விதி பொருந்தும் என்றும் Kampe கூறியுள்ளார்.

இந்த அறிவிப்புக்கும் இனப்பாகுபாட்டிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை என்று அவர் கூறினார்.

இது ஒரு புறமிருக்க, கடந்த வாரம் Essenஇலுள்ள உணவு வங்கி ஒன்று ஜேர்மன் பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்கு உணவு வழங்கப்படாது என்று அறிவித்து சர்ச்சைக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.

Credit:AFP


மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்