ஜேர்மனியில் மர்மமான முறையில் மாயமான பெரும் பணக்காரர்

Report Print Trinity in ஜேர்மனி
334Shares
334Shares
lankasrimarket.com

ஆல்ப்ஸ் மலைகளில் பனி சறுக்கு விளையாடப்போன ஜேர்மனியின் மிகப் பெரிய பணக்காரரில் ஒருவரான Karl-Erivan Haub மர்மமான முறையில் மாயமாகியுள்ளார்.

Tengelmann சூப்பர்மார்க்கெட் சங்கிலிக்கு வாரிசான கார்ல்-எரிவன் ஹாப், சனிக்கிழமையன்று மேட்டர்ஹோர்ன் அருகே ஆரம்பித்த தனது பனிச்சரிவு பயணத்தில் இருந்து திரும்பவில்லை.

இன்று இதுகுறித்து டெங்கில்மன் செய்திக்குறிப்பாளர் கூறுகையில், இவரைத் தாங்கள் முழு வேகத்துடன் தேடி வருவதாகக் கூறினார்.

58 வயதான பில்லியனர் Karl-Erivan Haub கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் நிறுவனப் பொறுப்பேற்றுள்ளார்.

கார்ல் ஒரு அனுபவமிக்க பனிச்சறுக்கு மற்றும் மலையேறுபவர் என்று கூறும் இவரது சகோதரர் கிறிஸ்டியன் ஹாப் அவர் இன்னமும் உயிரோடிருப்பார் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.

ஹாபைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் வணிகம் சீராக இயங்கத் தொடங்கும் என இவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்