சிரியாவின் மீதான தாக்குதல்கள் சரியானவை: பின் வாங்கும் ஜேர்மன்!

Report Print Trinity in ஜேர்மனி
700Shares
700Shares
lankasrimarket.com

வேதிப்பொருள்கள் பயன்படுத்திய சிரியாவின் மீது கூட்டு நாடுகள் நடத்திய வான்வழி தாக்குதலைத் தாங்கள் ஆதரிப்பதாக ஜெர்மன் அதிபர் மெர்கல் கூறினார்.

கடந்த வாரம் டமாஸ்கஸில் பொதுமக்கள் மீதான சிரிய அரசாங்கத்தின் இரசாயன தாக்குதலுக்கு பழிவாங்குவதற்காக டமாஸ்கஸ் அருகே உள்ள இராணுவ மற்றும் இரசாயன ஆராய்ச்சி கூடத்தில் நடத்தப்பட்ட கூட்டு வான் வழிதாக்குதலில் அங்குள்ள ரசாயனக் கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய இந்தக் கூட்டு தாக்குதல் இப்போது உலகையே பதற்றமடைய செய்திருக்கிறது.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் எங்கள் நட்பு நாடுகளான அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு நாடுகளின் செயல்களை தாங்கள் ஆதரிக்கிறோம் என்னும் ஜேர்மன் அதிபர், ஐ நா சபையில் ஒரு தற்காலிக இடத்தை பெற இந்தக் கோடையில் முயற்சிப்பது குறிப்பிடத்தக்கது.

இரசாயன ஆயுதங்களுக்கு எதிரான மரபுகளை அகற்றுவதற்கான "அனைத்து இராஜதந்திர நடவடிக்கைகளையும் ஜேர்மனி உறுதியுடன் ஆதரிக்கிறது" என்று கடந்த சனிக்கிழமை இவர் தெரிவித்த நிலையில், அவர்களின் நட்பு நாடுகளின் இந்த செயல் "அவசியமானது மற்றும் பொருத்தமானது" என்றும் தெரிவித்துள்ளார்.

சிரியா மற்றும் ரஷ்யா தாங்கள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறப்படுவது ஆதாரமற்றவை தெரிவித்துள்ள போதிலும், இது குறித்த கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் (CDU) "அங்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்து ஒரு விசாரணை மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது" எனும் கூற்றை மேற்கோள் காட்டும் ஜெர்மன் அதிபர் மெர்கல், மேலும் புள்ளி விபரங்களோடு அசாத் அரசாங்கம், டூமாவில் உள்ள பொதுமக்கள் மீதான தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேர்க்கெலின் கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) அதிகாரிகள் இவரின் இந்தக் கூற்றை ஆதரிக்கின்றனர்.

இதுகுறித்து வேறு சில எதிர்கட்சி அரசியல்வாதிகள் வெவ்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

பழிவாங்குதல் இலக்காக இருக்கக்கூடாது. இலக்கு உயிர்களை காப்பாற்ற வேண்டும். சமாதானத்தை உருவாக்க வேண்டும் என்றும் சர்வதேச சட்டத்தின் மற்றொரு இராணுவ மீறல் என்றும் ஜேர்மன் அரசாங்கம் இந்த தாக்குதலை ஆதரிப்பதற்கு மிகவும் வருந்த வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் தாங்கள் இணையப்போவதில்லை என்று கடந்த வாரம் ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் கூறிய நிலையில் இப்போது அதிபர் மெர்கல் அதனை மாற்றி பேசுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்