சட்டவிதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு சாரா அமைப்பு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
82Shares
82Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் பெர்லின் நகரில் சட்டவிதிகளை மீறி வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகளுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக அவர்களின் வாகனங்களின் மீது மஞ்சள் பலூன் ஒட்டி இரண்டு அரசு சாரா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

சுற்றுச்சூழல் போக்குவரத்து கிளப் VCD மற்றும் Clevere Städte ஆகிய இரு அமைப்புகள் இணைந்து, பெர்லின் நகரில் சட்டவிதிமுறைகளை மீறி நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களின் மீது மஞ்சள் பலூன் மற்றும் ஸ்பிரேக்களை அடித்து நீங்கள் சட்டவிதிமுறைகளை மீறியுள்ளீர்கள் என தெரிவித்துள்ளனர்.

பெர்லின் மட்டுமல்லாது Hamburg, Cologne, Hanover மற்றும் Bonn ஆகிய நகரங்களிலும் இந்த விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.

இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவர் கூறியதாவது, இதுபோன்று வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வாகன ஓட்டிகள் உணர்வதில்லை.

ஜேர்மனில் சட்டவிதிகளை மீறி வாகனம் நிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த விழிப்புணர்வில் ஈடுபட்டோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்