பாலியல் தொழில் செய்யாவிட்டால் பில்லி சூனியம் வைத்து விடுவேன்: மிரட்டிய நர்ஸுக்கு நேர்ந்த கதி

Report Print Balamanuvelan in ஜேர்மனி
268Shares
268Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக நைஜீரியப் பெண்களைக் கடத்தும் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

லைபீரியாவில் பிறந்து பிரித்தானியாவில் நர்ஸ் வேலை பார்த்து பிரித்தானியக் குடியுரிமை பெற்ற Josephine Iyamu (51), நைஜீரியாவில் கிராமப்பகுதிகளில் உள்ள பெண்கள் முன்னேற்றத்திற்காக ஒரு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.

பின்னர் ஐரோப்பாவில் சிறப்பான வாழ்க்கை அமைத்து தருவதாக வாக்களித்து பெண்களை அவர் ஜேர்மனிக்கு கடத்துவார்.

பெண்களைக் கடத்தும் முன், கோழிகளின் இதயத்தை உண்ணுதல், இரத்தத்தைக் குடித்தல், உடலைக் கீறிக்கொள்ளுதல் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட மதச் சடங்கு ஒன்றை நடத்தும் Josephine Iyamu, அந்த பெண்களிடம் தனக்கு 38,000 டொலர்கள் கொடுக்க வேண்டும் என்றும், எங்கும் ஓடிப்போக மாட்டோம் என்றும், பொலிசுக்கு தகவல் கொடுக்க மாட்டோம் என்றும் சத்தியம் வாங்கிக் கொள்வார்.

இம்முறை Iyamu ஐந்து நைஜீரியப் பெண்களை ஆசை காட்டி படகு ஒன்றில் ஏற்றிஜேர்மனிக்கு அனுப்பினார்.

அங்கு சென்றதும் அந்தப் பெண்கள் பாலியல் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தப்பட்டார்கள்.

மாதம் தனக்கு 1,500 யூரோக்கள் அனுப்ப வேண்டும் என்றும் மறுத்தால் அந்தப் பெண்களின் குடும்பத்தினருக்கு பில்லி சூனியம் வைப்பதாக மிரட்டலும் விடுத்தார் Iyamu.

இந்நிலையில் ஜேர்மனியில் உள்ள பாலியல் விடுதி ஒன்றின் உரிமையாளர் அந்த ஐந்து பெண்களில் ஒரு பெண்ணின் பாஸ்போர்ட் போலி என சந்தேகம் ஏற்பட்டதன்பேரில் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

புகாரின் பேரில் விசாரிக்கத் தொடங்கிய ஜேர்மன் பொலிசார், பிரித்தானிய மற்றும் நைஜீரிய பொலிசாருடன் இணைந்து மேற்கொண்ட வேட்டையின் முடிவாக பிரித்தானிய பொலிசார் Iyamuவைக் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் Iyamuக்கு நேற்றைய தினம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்