ஜேர்மனில் சட்டவிரோதமாக போதை மருந்து கடத்திய நான்கு பேர் கைது

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் Miri-Clan அமைப்பை ( Mhallami-Lebanese criminal organisation) சேர்ந்த 4 சகோதரர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஐரோப்பாவை அடிப்படையாக கொண்டு குற்றவியல் அமைப்பு இந்த Miri-Clan ஆகும். இவர்கள் சட்டவிரோதமாக போதை மருந்துகளை விற்பனை செய்தல், கடத்தும் தொழிலை செய்து வருகிறார்கள்.

ஜேர்மனில் மட்டும் இந்த அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் 2,600 பேர் உள்ளனர். Bremen நகரத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக 50 மில்லியன் யூரோ மதிப்பிலான போதை மருந்துகளை கடத்தியுள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், Bochum, Herne மற்றும் Essen ஆகிய நகரங்களில் உள்ள குடியிருப்புகளில் பொலிசார் மேற்கொண்ட சோதனையில் இந்த அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

கோகெய்ன் மற்றும் மரிஜுவானாவை கடத்தியுள்ளனர். மேலும் சோதனையின் போது ஐந்து கிலோ எடையுள்ள மரிஜுவானாவை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers