ஜேர்மனிக்கு இன்னொரு சிக்கல்: மிரட்டும் இரு நாடுகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஏற்கனவே அரசியல் சிக்கலில் சிக்கி ஜேர்மனி தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் புதிதாக அதற்கு இன்னொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது, இம்முறை சிக்கல் ஜேர்மனிக்கு வெளியிலிருந்து வந்திருக்கிறது.

போலந்து மற்றும் கிரீஸ் ஆகிய இரு நாடுகளும் தங்களுக்கு ஜேர்மனி இழப்பீடு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஸிக்களால் ஏற்படுத்தப்பட்ட சேதத்திற்கு ஒரு ட்ரில்லியன் யூரோக்கள் வரை நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என அவ்விரு நாடுகளும் ஜேர்மனியை நிர்ப்பந்தித்து வருகின்றன.

கிரீஸ் மற்றும் போலந்து நாட்டு அரசியல்வாதிகள் ஜேர்மன் நாஸிக்களால் செய்யப்பட்ட அராஜகங்களுக்கு இழப்பீடாக இன்னும் பல பில்லியன் யூரோக்கள் கேட்டு பெர்லினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Warsaw நகரத்தை ஜேர்மன் படைகள் முற்றிலும் தரைமட்டமாக்கியதற்கு தங்களுக்கு இன்னும் சரியான அளவிற்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என போலந்து அதிபரான Andrzej Duda தெரிவித்துள்ளார்.

போலந்தைப் போலவே கிரீசும் இழப்பீடு கோருவதற்கான திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறது.

கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மனியிடமிருந்து பெரிய தொகையை கடனாக பெற்றிருந்ததால் இதுவரை இழப்பீடு குறித்து பேசவில்லை என்றும் தற்போது அது ஜேர்மனியை நிர்ப்பந்திக்க தயாராகிவிட்டதாகவும் கிரீஸ் நாடாளுமன்ற உறுப்பினரான Costas Douzinas தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளிலும் ஏற்பட்ட உயிர்ச்சேதம் முதலான இழப்புகளுக்கு ஜேர்மனி இழப்பீடு கொடுக்க வேண்டுமானால், கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் வரை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்