சொந்த நாடு கைவிட்ட நிலையில் வாழ்க்கை கொடுத்த ஜேர்மனி: ஒரு வலிமை மிக்க காதல் கதை

Report Print Balamanuvelan in ஜேர்மனி

வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இருவருக்கிடையே உருவான காதலால், சொந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியாமல் தவித்த ஒரு தம்பதிக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறது ஜேர்மனி.

அரசியல் ரீதியாக அகதிகளுக்கு நாட்டை திறந்து விட்டதால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தாலும், பலருக்கு ஜேர்மனி நன்மை செய்துள்ளதற்கு சாட்சியங்கள் வெளியாகிக் கொண்டேதான் இருக்கின்றன.

அவர்களில் சிரியாவைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடியும் அடக்கம். குர்திஷ் யாஸிடி இனத்தவரான Hanan Othman வேலை தேடி சிரியாவுக்கு சென்றபோது இஸ்லாமியரான Hudaவை சந்தித்தார்.

இருவரும் காதலில் விழுந்தனர், என்றாலும் சிரியாவின் கிராமங்களில் இஸ்லாமியர்களும் யாஸிடி இனத்தவர்களும் திருமணம் செய்து கொள்வதில்லை. எதிர்ப்புகளுக்கு மத்தியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள, Hananஇன் குடும்பத்தவர் தவிர அனைவரும் காதல் ஜோடியை தள்ளி வைத்தனர்.

Hananஇன் குடும்பத்தவர் மகனுக்கு ஆதரவளித்தாலும், மருமகளை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை, எப்படியாவது அவர்களை பிரித்து விடுவதிலேயே குறியாக, Hudaவை துன்புறுத்த முற்பட்டனர்.

இந்நிலையில் தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர்.

மனம் முதிர்ந்த காதலர்களான இருவரும், மற்றவரது மதத்திற்கு உரிய மரியாதையை அளிக்க, மற்றவர்களால் அவர்களை பிரிக்க முடியாமல் போனது.

மனைவியை புனிதப்பயணம் அனுப்பி வைத்ததோடு பிள்ளைகளும் தங்கள் மதங்களை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கொடுத்தார் Hanan.

இதற்கிடையில் சிரிய உள்நாட்டுப்போர் துரத்தியடிக்க, துருக்கிக்கு இடம்பெயர்ந்தது Hananஇன் குடும்பம்.

துருக்கியில் இன ரீதியான தாக்குதல்கள் உட்பட பிரச்சினைகள் அதிகமாயிற்று. வேலை வாங்கிக் கொண்டு ஊதியம் கொடுக்க மறுத்தனர் வேலை வழங்கியோர். கடைசியாக நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தது Hananஇன் குடும்பம்.

உணவை தியாகம் செய்து, பணம் மிச்சம் பிடித்து ஜேர்மனிக்கு வந்து சேர்ந்த Hanan, இரண்டு மாதங்கள் கடினமாக உழைத்து கொஞ்சம் பணம் சேகரித்ததோடு, கொஞ்சம் பணம் கடனும் வாங்கி ஒருவழியாக தனது குடும்பத்தினரையும் ஜேர்மனிக்கு கொண்டு வந்தார்.

கணவனும் மனைவியும் ஜேர்மன் வகுப்புகளில் சேர்ந்து மொழி பயில, தற்போது Hanan அலுவலகம் ஒன்றில் பணி புரிகிறார்.

ஒரே சோகம், Huda உடல் நலம் குன்றி, வீட்டைப் பார்த்துக் கொள்ள தடுமாறுகிறார். ஆனால் அந்த வேலைகளையும் சேர்த்து Hanan பார்க்கிறார்.

என்றாலும் சற்றும் முகம் கோணாமல், இங்கு எங்கள் புதிய வீட்டைக் கண்டு கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறும் Hanan, நாங்கள் நீண்ட காலமாக கனவு கண்ட பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் ஜேர்மனி எங்களுக்கு அளித்துள்ளது என்கிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers